ஆர்கே. நகர் இடைத் தேர்தலில் பா.ஜ., சார்பில் கங்கை அமரன் போட்டி யிடுகிறார். அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இதுதொடர்பாக கூறியதாவது: தினகரன் வேட்புமனுக்கள் மீதான சந்தேகங்கள் தீர்க்கப் படும். பிரசாரத்திற்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் வருவார்கள். எதிர்பார்க்காத தலைவர்கள் பிரசாரத்திற்கு வருவார்கள். இடைத் தேர்தல் என்பதால் பிரதமர் மோடி வரமுடியாது. வேட்பாளராக என்னை தேர்வு செய்ததில் மோடி, அமித்ஷா, தமிழிசை பென்னார், ராஜா, கணேசன் ஆகியோருக்கு பங்கு உண்டு. எனக்கு ஆதரவாக சினிமாதுறையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி 7 ம் தேதி நடைபெற உள்ளது. யார்வருவார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply