டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரணாப்முகர்ஜி தலைமையில் கவர்னர்கள் மாநாடு இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்கி புதன் கிழமை வரை நடைபெறுகிறது. இதில் 23 மாநில கவர்னர்களும் மற்றும் 2 துணை நிலை கவர்னர் களும் கலந்து கொள்கின்றனர்.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மத்திய மந்திரிகளும் இந்தமாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

தீவிரவாத செயல்களுக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, மத்தியஅரசின் திட்டங்களான துய்மை இந்தியா, 2022-க்குள் அனைவருக்கும் வீடு உள்ளிட்டவற்றின் செயல் பாடுகள் போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

Leave a Reply