நாட்டின் பிரதமராகும் கனவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிறுத்திகொள்ள வேண்டும் என்று பாஜக பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கிண்டல் செய்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

அடுத்த பிரதமராகும் கனவில், சிறுவன் (ராகுல்காந்தி) உள்ளார் என்பது நமக்குதெரியும். அந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது. நாட்டின் பிரதமராக நரேந்திரமோடியே மீண்டும் பதவியேற்பார். நாட்டின் பிரதமர்களாக இதுவரை இருந்தவர்களில், பிரதமர் மோடிதான் மிகவும் சிறந்தவர். 2019ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அவர் பிரதமராவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால், பிரதமராகும் கனவை ராகுல்காந்தி நிறுத்தி கொள்ள வேண்டும்.

மேற்குவங்கத்தில் ஆட்சியிலிருக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, வாக்குவங்கிக்காக ஊடுருவல் காரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இந்தசலுகைகள் அனைத்தும், நமது நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டியவை. அவை அனைத்தும் ஊடுருவல்காரர்களுக்கு செல்கிறது. நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட வேண்டிய ஊடுருவல்காரர்களுக்கு, சலுகைகளை திரிணமூல் காங்கிரஸ் அளிப்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்.

திரிணமூல் காங்கிரஸ் அரசு, ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது. இதனால் தான், மாநிலம் முழுவதும் ஜனநாயகத்தை காப்போம் என்றபெயரில் பேரணி நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால், சந்தேகத்தின் அடிப்படையில், அந்தபேரணிக்கு அனுமதியளிக்க மாநில அரசு மறுத்துவிட்டது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.