பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளையடுத்து, டில்லியில் உள்ள, காதிபவனின் ஒருநாள் விற்பனை, ஒருகோடி ரூபாயை தாண்டி, சாதனை படைத்துள்ளது.

காதி மற்றும் கிராமோத் யோக் ஆணையத்தின் கீழ் இயங்கும், காதிபவன் எனப்படும், கதர் பொருட்கள் விற்பனையகம், நாடுமுழுவதும் அமைந்துள்ளது.

சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரதமர் மோடி, 'பொது மக்கள், வாரம் ஒரு முறையாவது, கதர் ஆடைகளை அணிய வேண்டும்; காதிபொருட்களை பயன்படுத்த வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, கடந்த, 22ல், டில்லி கன்னாட் பிளேசில் உள்ள, காதிபவனில், 1.08 கோடி ரூபாய்க்கு, காதிபொருட்கள் விற்பனையாகி சாதனை படைத்தது.

பிரதமரின் கோரிக்கையை அடுத்து, கதர்விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக, காதி மற்றும் கிராமோத்யோக் ஆணைய தலைவர், விகே.சக்சேனா கூறினார்.

Leave a Reply