பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மாவட்ட தொழில்மையம் மூலமாகவும், கிராமங்களில் கதர் கிராமத்தொழில்கள் ஆணையம் மூலமாகவும் நாடுமுழுவதும் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்ததிட்டத்தின் மூலமாக இதுவரை 7 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளதாக மத்திய சிறு, குறு தொழில் துறை மந்திரி கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 92,508 தொழில்கள் உருவாக்கப்பட்டு அதன்மூலம் 6,80,000 வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும், அதில் 23,140 பேர் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply