“பிரதமர் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டைத் தவிர, தமிழக ஊடகங்கள் வேறு எதையும் செய்வதற்கு தயாராக இல்லையா? தமிழ்நாடுமீடியா ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக மாறிக்கொண்டிருக்கிறது என தெரியவில்லை. தமிழக ஆளுநர் ஆய்வு நடத்தச்சென்றால், பெண் குளியலறையைப் பார்த்தார் என்று செய்தி வெளியிடு கின்றன.

இப்போது மோடி எதிர்ப்பு நிலைப் பாட்டைக் கையில் எடுத்துள்ளன. காவிரிப் பிரச்னை இந்தளவுக்குப் போனதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரின் குடும்பமும் தான் காரணம். அதை ஊடகங்கள் ஏன் வெளிப்படுத்தத் தயங்குகின்றன. 1967-ல் காவிரியில் தண்ணீர் ஓடியது. இன்னைக்கு தண்ணீர் இல்லாத காவிரியில் ஸ்டாலின் நடை பயணம் சென்று, அங்கு பொதுக்கூட்டம் நடத்துகிறார். அதையெல்லாம் எழுதாமல், பிரதமரின் பயணத் திட்டம் என்றெல்லாம் கேட்கிறீர்கள். 50 வருஷமா காவிரியில் தண்ணீர் ஓடியது. இன்னைக்கு தண்ணீர் இல்லாத இடத்தில் பொதுக் கூட்டம் போடும் ஸ்டாலினின் உண்மையான நிலையை மக்களிடம் எடுத்துக்கூறாமல், பிரதமருக்கு எதிர்ப்பு என ஊடகங்கள் செயல்படுவது ஏன் என்று தெரியவில்லை.

கர்நாடகத்தில் அணை கட்டுவதற்கு, அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்ட மன்றத்தில் ஒப்புதல் அளித்தாரா இல்லையா? அங்கு அணை கட்டியதால் தான், இப்போது தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏன், மோடிக்கு எதிரான, இந்தியாவுக்கு எதிரான நிலைப் பாட்டை எடுக்கிறீர்கள்? காவிரி பிரச்னையில் 50 வருஷமா தமிழ்நாட்டுக்கு, கருணாநிதி குடும்பம் செய்யாததை, 50 நாள்களில் தீர்வுகாண முடியும் என்று ஊடகங்கள் கருதுகின்றனவா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் சார்பில் உறுப்பினரை நியமித்து விட்டார்களா? எனவே, பிரதமர் மோடியை வேண்டுமென்றே இலக்குவைத்து, அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது இந்தியாவை உடைப்பதற்கான முயற்சி. `ஆன்டி மோடி என்பது, ஆன்டி இந்தியா'-வாகத்தான் அர்த்தமாகும். 

தமிழ்நாட்டை கருணாநிதி குடும்பம் பாலைவன மாக்கியுள்ளது என்பதை ஊடகங்கள் எழுதாவிட்டால், அவர்கள் தமிழ் உணர்வாளர்களே இல்லை என்பது என் கருத்து. ஸ்டாலினின் நாடகத்தை ஆதரித்து எழுதக் கூடிய அனைவரும் பொய்யர்கள். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய திட்டம் வருகிறது. பாதுகாப்புத் துறை சார்பில் கண்காட்சி நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள பிரதமர் வருகிறார். அவரைக் கைகூப்பி வரவேற்க வேண்டாமா? மாறாக பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவது எந்தவகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply