கர்நாடகாவில் காங்கிரஸ், மஜதகூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து மத்தியஅமைச்சர் அமித்ஷா மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் கலேபரங்களுக்கு நேற்றுமாலை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், அரசுக்கு எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை இழந்தநிலையில், முதல்வர் குமாரசாமி தனது அமைச்சகள், சகாக்களுடன் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர், அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படும் வரை காபந்து முதல்வராக நீடிக்க கேட்டுக்கொண்டார்.
ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து மாநில உயர்அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை இழந்தநிலையில், முதல்வர் குமாரசாமி தனது அமைச்சகள், சகாக்களுடன் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர், அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படும் வரை காபந்து முதல்வராக நீடிக்க கேட்டுக்கொண்டார்.
ஆட்சி கவிழ்ந்ததை] தொடர்ந்து மாநில உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஆட்சி அமைக்க உரிமைகோரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி இது தொடர்பாக கூறுகையில், எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்பதே பெரும்பாலான கர்நாடகா பாஜக தலைவர்களின் விருப்பம். இருப்பினும் கட்சியின் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்றார்.