வரும் மே மாதம், பிரதமர் நரேந்திரமோடி இலங்கை செல்கிறார். அதற்குமுன், இலங்கை பறிமுதல் செய்துள்ள படகுகளை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய இணையமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை, நேற்று டில்லியில், தமிழகமீனவ பிரதிநிதிகள் சந்தித்துப்பேசினர். இந்த சந்திப்பிற்கு பின், நிருபர்களிடம் மத்திய இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகமீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படு மென்றும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி விரைவில் அளிக்கப்படு மென்றும், வெளியுறவு அமைச்சர் உறுதியளித்து உள்ளார்.

பிரதமர் மோடி, வரும் மே மாதம், இலங்கை செல்ல உள்ளார். அதற்கு முன்பாகவே, நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை அரசால் பறிமுதல் செய்யப் பட்டுள்ள, தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

– நமது டில்லி நிருபர் –

Tags:

Leave a Reply