தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 68வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அவரது தொண்டர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது.
 
 இந்நிலையில், இந்திய பிரதமர் தொலை பேசியில் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”திரு ஜெயலலிதா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நிறைந்த உடல் நலத்தோடு நீண்ட காலம் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply