பிரதமர் நரேந்திரமோடி இன்று பல்வேறு உலக தலைவர்களை தொலை பேசியில் அழைத்து ரம்ஜான்  வாழ்த்து கூறினார்.

 பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் ஷெரீப்பை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய மோடி அறுவை சிகிச்கைக்கு பின் தற்போதைய உடல்நலம் குறித்து நலம்விசாரித்தார். பின்னர் ரமலான் பண்டிகை வாழ்த்துக்களையும் கூறினார்.

மேலும்  ஈரான் அதிபர் ரவுஹானி, ஆப்கானிஸ் தான் அதிபர் அஸ்ரப் கனி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, மாலத் தீவு அதிபர் அப்துல்லா யாமீன், சவுதி அரேபிய அரசர் சல்மான், அபுதாபியின் முகமது பின் சயாத் அல் நயான் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய தலைவர்களுக்கு மோடி ரம்ஜான்வாழ்த்து தெரிவித்தார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துசெய்தியில்  சிறப்பான நாளில் சமூகத்தில் அன்பும் அமைதியும் நிலவவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply