தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக, பிரதமர் நரேந்திரமோடி இன்று இரவு மதுரை வருகை தந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாளை, பாஜக, அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழகத்தின் தேனி மற்றும் ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

இதற்காக விமானம் மூலம் இன்று இரவு சுமார் 9.45 மணியளவில், கேரளாவில் இருந்து மதுரை வருகைதந்தார் பிரதமா் மோடி. இதையடுத்து, பசுமலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ளார் அவர். நாளைகாலை தேனியில் பிரசாரத்தை தொடங்கும் பிரதமா் மோடி, தேனிதொகுதி அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீா் செலவத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார், திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் கே.ஜோதிமுத்து, மதுரைதொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஆர்.அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

இதையடுத்து, ராமநாதபுரம் செல்லும் நரேந்திரமோடி, அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), ஹெச்.ராஜா (சிவகங்கை), தமிழிசை சௌந்தரராஜன் (தூத்துக்குடி), புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி (தென்காசி) ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

Leave a Reply