பிரதமர் நரேந்திரமோடி ஜெர்மனி, ரஷியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டவர் தற்போது ஜெர்மன் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை அவர் சந்தித்து கலந்துரை யாடுகிறார்.

பின்னர், அந்நாட்டின் அதிபர் ஃபிரான்க்-வால்டர் ஸ்டெயின் மியரையும் அவர் சந்திக்க உள்ளார். ஜெர்மனி தலை நகர் பெர்லினில் தொழிலதி பர்களுடன் இருதலைவர்களும் வர்த்தம், முதலீடு தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

 

தனது ஜெர்மன்பயணம் இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்தும் என தான் நம்புவதாக மோடி தெரிவித்துள்ளார். அங்கிருந்து நாளை ஸ்பெயினுக்கு பிரதமர் மோடி செல்கிறார். 

Leave a Reply