கருத்துகணிப்புகளை நடத்துவதில் முன்னோடி நிறுவனமான சி-வோட்டர் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு, மாநில அரசுகள்குறித்து கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. மாநிலம் தோறும் தலா 3,000 பேரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநிலளவில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடத்தும் ஒடிசாவில் பிரதமர் நரேந்திரமோடிக்கு 95.6 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் 93.95%, சத்தீஸ்கரில் 92.73%, ஆந்திராவில் 83.6% பேர் பிரதமர் மோடியை ஆதரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜார்க்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தது. எனினும் அந்தமாநிலத்தில் பிரதமர் மோடிக்கு 82.97 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது.

மகாராஷ்டிராவில் 71.48 சதவீதம் பேரும் வடகிழக்கில் 69.45 சதவீதம் பேரும், மேற்கு வங்கத்தில் 64.06 சதவீதம் பேரும் பிரதமரை ஆதரித்துள்ளனர். கேரளாவில் 32.89%, தமிழகத்தில் 32.15% பேர்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய அளவில் 0.58 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவுதெரிவித்துள்ளனர்.

Comments are closed.