பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான் என்று நடிகர் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

சிவாஜி கணேசனின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான ராம்குமார், பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது எனது தந்தை சிவாஜி கணேசன், தமிழகமக்களின் மனங்களை வென்ற கலைஞர். எந்தப் பிரதிபலனையும் பாராமல் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தார். ஆனால், அவருக்கு காங்கிரஸ்கட்சி எதுவும் செய்யவில்லை. கடைசிவரை ஒதுக்கியே வைத்திருந்தது. இது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் ஒருகட்டத்தில் மிகுந்த மனவேதனையுடன் காங்கிரஸிலிருந்து விலகினார்.

பாஜகவில் இணைவது நான் திடீரென எடுத்தமுடிவு அல்ல. பாஜக தலைவர்களுடன் எங்கள் குடும்பத்துக்கு நீண்டகாலமாகவே நல்ல நட்புள்ளது. சுஷ்மா ஸ்வராஜ் போன்ற தலைவர்கள் எங்கள் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். நான் எனதுதந்தை சிவாஜியின் ரசிகன். அதுபோல பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகன். மக்கள் நலனுக்காக உழைத்துவரும் மோடியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவே பாஜகவில் இணைகிறேன் என்றார்.

Comments are closed.