பிரதமர் நரேந்திர மோடியை சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி அடெல் அல் ஜூப்பியர் இன்று சந்தித்துள்ளார்.

மார்ச் 30-ம் தேதி முதல் 3 நாடுகள் பயணமாக சவுதி அரேபியா, அமெரிக்கா, பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். மார்ச் 30-ம் தேதி பெல்ஜியத்தில் நடக்கும் இந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாடு, பின்னர் வாஷிங்டனில் நடக்கும் அணு சக்தி பாதுகாப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ளும் மோடி இறுதியாக சவுதி அரேபியா செல்கிறார்.

சவுதி அரேபியா பயணத்தின்போது, இருநாட்டு உறவுகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி அடெல் அல் ஜூப்பியர் ஒரு நாள் பயணமாக இன்று தலைநகர் புதுடெல்லி வந்துள்ளார்.

இதனைதொடர்ந்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவர் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்கிறார்.

அடுத்தமாதம் மோடி சவுதி அரேபியா செல்ல உள்ள நிலையில் தற்போது அவரை சவுதி அரேபியா வெளியுறவுத் துறை மந்திரி சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply