கருப்புபணத்தை ஒழிக்க அடிதளமிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வரலாறு படைத்துவிட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பல்லியாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியப்போது கருப்பு பண ஒழிப்பிற்கு வித்திட்டு, பிரதமர் புதிய வரலாறு படைத்துவிட்டார் என புகழாரம் சூட்டினார்.

இந்திய வரலாற்றில் நவம்பர் 8ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார்.மேலும் கருப்புபணத்தின் மீது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றி அடைந்தது என்று தெரிவித்த அவர், இதனால் பொது மக்கள் சில நினங்களுக்கு சங்கடங்களை சந்திக்கநேரிடும் என்றும், நிலைமை விரைவில் சரியாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

போலி நோட்களை புழக்கத்தில்விடும் தீவிரவாதிகளின் சதி திட்டம் தடுக்கப் பட்டது என்றும், இதன் மூலம் அவர்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையையும் இந்தியஅரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்றும் கூறினார்.

Leave a Reply