பிரதமர் நரேந்திர மோடி தனது வீட்டு சாப்பாட்டு செலவுக்கு சொந்தகாசையே பயன்படுத்துகிறார்; அரசு பணத்தில் செலவிடு வதில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் இந்த பதிலைத் தந்துள்ளது.

அந்த சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு:

பிரதமருடைய வீட்டுச் சமையலுக்கான செலவை யார் செய்கிறார்கள்?
பிரதமரின் வீட்டில் சமையலுக்காக செலவிடப்படுவது அவருடைய சொந்தப் பணமே; அரசு பணம் அல்ல.

பிரதமருக்கு பிடித்தமான உணவு எது?

அவருடைய சமையல் காரர் தயாரிக்கும் கம்பு ரொட்டியும் கிச்சடியும் அவருக்கு மிகவும்பிடிக்கும்.

மோடி எத்தனை நாள் விடுமுறை எடுத்திருக்கிறார்?

பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள்கூட விடுமுறை எடுத்தது இல்லை

பிதரமர் எத்தனை மணிநேரம் பணியாற்றுகிறார்?

பிரதமர் 24 மணிநேரம் பணியில் இருக்கிறார்

பிரதமரின் வீட்டில் உள்ள இன்டர்நெட் இணைப்பின் வேகம் என்ன?

34 Mbps

பிரதமரின் சமூக வலைதளஙகளை யார் கையாள்கின்றனர்?

அவருடைய சொந்தபெயரில் உள்ள சமூக வலைதளங்களை அவரே கையாற்கிறார். பிரதமர் அலுவலகத்தின் பெயரில் உள்ள சமூக வலைதளங்களை பிதரமர் அலுவலகம் கையாற்கிறது.

Leave a Reply