கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ, "நாடெங்கும் பெரியளவில் விவாதிக்கப்படும்  500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை மதிமுக. வரவேற்கிறது . மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்திவருகிறது . ஆனால் இதற்கான போரட்டத்தை நாங்கள் ஆதரிக்க வில்லை. கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் நோட்டுகளை மாற்றிவிட முடியாதபடி பிரதமரின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மக்களுக்கு சிரமம்ஏற்பட்டுள்ளது உண்மைதான். அந்த சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துவதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் ஒட்டுமொத்தமாக மோடியின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதைதான் நான் எதிர்கிறேன் . இந்த நடவடிக்கை அடிதட்டு மக்கள் உள்ளிட்ட  பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறது. அதனால் பிரதமர்மோடியின் இந்த நடவடிக்கையை ம.தி.மு.க. வரவேற்கிறது," என்றார்.

Leave a Reply