டில்லி சென்ற முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து, புயல்சீரமைப்பு பணிகளுக்காக ரூ.15 ஆயிரம்கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறினார்.
 

 

கடந்த 16-ம் தேதி கஜா புயல் தாக்கியதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் கடும்சேதத்தை சந்தித்துள்ளன.ஏராளமான பொருட் சேதத்துடன் உயிர்தேசமும் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்துக்குப்பின் நேற்று முன்தினம் (நவ.,20) முதல்வர் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் சேதமதிப்பீட்டு அறிக்கையுடன், நேற்று மாலை டில்லி சென்றார். அங்கு அதிமுக. எம்.பி.க்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். 

 

பிரதமர் மோடியை இன்று(நவ.,22) காலை தமிழகமுதல்வர் பழனிசாமி சந்தித்து புயல்பாதிப்பு குறித்து விளக்கி கூறினார்.பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கஜாபுயல் பாதிப்பு குறித்தும், சேதவிவரங்கள் குறித்தும் பிரதமரிடம் விளக்கி கூறி, கோரிக்கைமனு அளித்து உள்ளேன். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட உடனடியாக மத்தியகுழுவை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக பிரதமர் கூறினார். நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கவேண்டும் எனவும், இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடி கோரிக்கை வைத்துள்ளேன். இதனை வழங்குவதாக பிரதமர் கூறியுள்ளார்.
 

புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கபட்டுள்ளன. 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12,298 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 3, 41, 870 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 30 ஆயிரம் ஹெக்டேர் தென்னை மரங்கள்சேதமடைந்துள்ளன.நிஷா புயலின் போது திமுக ஆட்சியில் அளித்த நிதியைவிட தற்போது நிதி வழங்கப்பட்டுள்ளது.

 

சாலை மார்க்கமாக ஸ்டாலின் எத்தனை இடங்களில் சென்று புயல்சேதத்தை ஆய்வு செய்தார். நான் ஹெலிகாப்டரில் சென்றதால்தான் சேத விவரம் முழுமையாக தெரிந்தது. பாதிப்புகுறித்த புகைப்படங்களை எடுத்துவைத்துள்ளேன். 3 இடங்களுக்கு சென்ற ஸ்டாலின், புயல்பாதிப்பை பார்வையிட்டு, பாதியிலேயே திரும்பிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.