திருப்பதி ஸ்ரீவெங்க டேஸ்வரா பல்கலை கழகத்தில் இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி திருப்பதி கோயிலுக்குசென்று சாமி தரிசனம் செய்தார்.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை கழகத்தில் இந்தியஅறிவியல் காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்கியது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை உறுப்பினர்களாககொண்ட இந்த சங்கத்தின் ஆண்டு மாநாடு இன்றுதொடங்கி 5 நாட்களுக்கு நடக்கிறது.

தேசிய வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்தமாநாடு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ரேணி குண்டாவிற்கு வந்தார். ரேணிகுண்டாவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்திற்கு வந்தார். திருப்பதிவந்த பிரதமரை அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு வரவேற்றார். இதையடுத்து இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சாமி தரிசனம் செய்தார்.

Leave a Reply