லட்சக் கணக்கானோர் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை பின் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அவர் வேறு ஒரு வரை பின் தொடர்வது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஆகாஷ்ஜெயின் என்பவர், தனது சகோதரியின் திருமண அழைப்பிதழை தூய்மை இந்தியாதிட்டத்தின் சின்னத்துடன் அச்சடித்திருப்பதை டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். தனது தந்தையின் விருப்பப்படியே தூய்மை இந்தியாதிட்டத்தின் சின்னத்தை அழைப்பிதழலில் அச்சடித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.‌ இதைப்பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, அதை ரீ டுவிட் செய்ததோடு அவரது கணக்கையும் பின்தொடர்ந்துள்ளார். புளூடிக் செய்திருப்பவரின் டுவிட்டர் கணக்கு மிகவும் பிரபலமானவரை குறிக்கும். ஆனால், அதைவிட மிகவும்பிரபலமாக பேசப்பட்டு வருபவராக தற்போது ஆகாஷ்ஜெயின்‌ மாறியுள்ளார்.

Leave a Reply