பிரதமர் மோடி, மே 5-ந் தேதிக்குபிறகு தமிழகத்தில் பிரசாரம்செய்ய வருகிறார் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


தமிழகத்தில் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முடியும்வரை தேர்தல் ஆணையம் எப்படி செயல்படுகிறது என்பது தான் முக்கியம். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கடைசி 10 நாட்கள் தேர்தல் ஆணையம் இருந்ததா? என்ற கேள்வி எழுந்தது. அதுபோல் ஒருசூழ்நிலையும், அவமானமும் தற்போது ஏற்படக்கூடாது.

பாஜக தேர்தல் அறிக்கையில் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வருவோம் என கூறி இருப்பதால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் எங்களை நிச்சயமாக பாதிக்காது. நாங்கள் கட்டாய மதமாற்ற த்தைத்தான் எதிர்க்கிறோம்.


கச்சத் தீவை மீட்பது குறித்து அதிமுக., திமுக.வினர் அரசியலுக்காக பேசி வருகின்றனர். 2 கட்சிகளால் தான் தமிழகத்திற்கு அவமானமும், இழப்பும் ஏற்பட்டு அவர்கள் ஆட்சிசெய்த காலங்கள் கருப்புபக்கமாக இருக்கிறது.

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தமிழகத்தில் பாஜக ஆட்சி ஏற்படும். பிரதமர் மோடி மே 5-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் தேர்தல்பிரசாரம் செய்ய வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply