தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு புதுடெல்லியில் சிறப்பான பணியை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு. அந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நம் தமிழக பிரதிநிதிகள் குடும்பத்துடன் டெல்லி வந்திருந்தனர். பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆளுமையை கண்டு நாங்கள் வியந்திருக்கிறோம், அவரை நேரில் சந்தித்து எங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர்.

அதன்படி பாராளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாள் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் முற்பகல் 11-30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கித் தந்தார். அதன்படி முற்பகலில் தமிழக முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாராளுமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்தார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நமது தமிழ் சொந்தங்களை கண்டவுடன் தமிழில் வணக்கம் என சொன்னார். பிறகு ஒவ்வொருவரின் பெயரையும் தனியாக கேட்டு அறிந்தார். அவர்களுடன் வந்திருந்த சிறுவர், சிறுமியர்களை வாஞ்சையுடன் அழைத்து அவர்கள் என்ன வகுப்பு படிக்கின்றனர்? பிற்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்? என ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்ததுடன் அவர்கள் இலக்கை அடைய தனது வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்தார்.

பிரதமரை சந்தித்தது தங்களது பாக்கியம் என நமது தமிழக உள்ளாட்சி பிரதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply