ஈழத் தமிழர்களின் கலாச்சார தலை நகரமாக கருதப்படும் யாழ்ப் பாணத்தில் துரையப்பா விளையாட்டு ஸ்டேடியம் உள்ளது.

இலங்கை ராணு வத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் நடந்ததால் யாழ்ப்பாணம் பகுதிமாணவர்கள் எந்த விளையாட்டு பயிற்சிகளும் பெறமுடியாத சூழ்நிலை இருந்தது.

தற்போது உள்நாட்டுப் போர் ஓய்ந்துவிட்டதால் தமிழர்கள் அதிகம்வாழும் பகுதிகளில் சீரமைப்புபணிகள் நடந்து வருகின்றன. இந்திய அரசு அதற்கு பல்வேறு வகைகளிலும் உதவிசெய்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள துரை யப்பா விளையாட்டு ஸ்டேடியத்தையும் இந்தியா சீரமைத்துள்ளது. அந்த ஸ்டேடியத்தின் பெவிலி யன்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

அந்த ஸ்டேடியத்தில் 400 மீட்டர் தொலைவு நவீன ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் போட்டிகள் நடத்து வதற்காக மின்னொளி வசதி செய்யப்பட்டுள்ளது.

இவைதவிர கழிவு நீர், குப்பைகள் அகற்றுவதற்கான நவீனவசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக யாழ்ப் பாணம் தீபகற்பம் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் விளையாட்டு பயிற்சிகள் எடுத்து பயன்பெறமுடியும்.

புதுப்பிக்கப்பட்ட யாழ்ப் பாணம் ஸ்டேடியத்தின் திறப்புவிழா வருகிற 18–ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடி வீடியோகான் பரன்சிங் மூலம் துரையப்பா ஸ்டேடியத்தை திறந்து வைப்பார்.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா சிறப்பு விருந்தினராக யாழ்ப் பாணத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்பார். அந்த விழா மேடையில் அமைக்கப்படும் பிரமாண்டதிரையில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பேசுவது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

Leave a Reply