கிராமப்புற ஏழைகளுக்கான பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஓர் ஆண்டு காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கடந்த ஆட்சியைபோல் அல்லாமல், குறித்தநேரத்தில் கட்டிமுடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கிராமப்புற ஏழைகளுக்கான பிரதமர் வீடுகட்டும் திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். வரும் 2020-22-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுஅளிக்கப்படும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட கால அவகாசக் குறைப்பாட்டை ஒருமுன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதுபோன்ற ஒரு தவறு நடைபெறாமல் இருக்க உறுதி கொண்டுள்ளது இதன்படி, வரும் 2018-19-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தர விட்டுள்ளார்.

 “இத்திட்டத்தின் பயனாளிகள் ஏழைமக்கள் என்பதால் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் ஓர்ஆண்டுக்குள் வீடுகளைக் கட்டிமுடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப் பணியை நான்கு கட்டங்களாக பிரித்து, அவற்றுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டையும் கட்டிமுடித்த பின்பே அதற்கான கட்டுமானத்தொகை ஒப்பந்ததாரர்களுக்கு கிடைக்கும் வகையிலும் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது”

இந்திரா வீடுகட்டும் திட்டத்தின்படி 20 சதுர கெஜம் என இருந்த வீட்டின் அளவு தற்போது 25 சதுரகெஜம் (257 சதுர அடி) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1 கோடி குடும்பங்களுக்கு 2018-19-ல் வீடுகள் கட்டிமுடிக்கப்படும்போது அடுத்த மக்களவைத் தேர்தல்நடைபெறும் நிலை உள்ளது. திட்டத்தின் முழுப் பலனைப் பெறுவதற்காகவே பிரதமர் மோடி இதற்கான காலக்கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply