மத்திய பிரதேசத்தில் பாஜக, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வருகிறது. சிவராஜ்சிங் சவுகான் தொடர்ந்து இரு முறை மாநில முதல்வராக பதவிவகித்து வருகிறார்.


இந்நிலையில் 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்திற்கு வரும் நவம்பா் 28-ந் தேதி சட்ட சபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க பாஜக கட்சியும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் கடுமையாக முயற்சித்து வருகின்றன.
 

இதனிடையே போபாலில் ஜனஷிர்வாத் தேர்தல்பிரச்சாரத்தை தொடக்கிவைத்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில்,

 

"நாங்கள் மத்திய பிரதேச மாநிலத்தை முன் மாதிரி மாநிலமாக கொண்டு வந்துள்ளோம். ஆனாலும், நாட்டிலேயே சிறந்த மாநிலமாக மத்திய பிரதேசத்தை நாங்கள் உருவாக்குவோம்.

 

அடுத்த ஐந்து வருடத்தில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தந்து, மாநிலத்திலுள்ள வறுமையை முற்றிலும் ஒழிப்போம்.  

 

2003 ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றபோது மத்திய பிரதேசத்தின் நிலைமை பரிதாபகரமாக இருந்தது. காங்கிரஸ்கட்சி மாநிலத்தை இருளில் தள்ளியிருந்தது.

 

நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பலமுயற்சிகளை மேற்கொண்டோம். மூழ்கியிருந்த பொருளாதாரத்தை புதுப்பித்து பலப்படுத்தி யுள்ளோம். இதனால் மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்" எனக் கூறினார்.

Leave a Reply