பிரிட்டனுடன் வரியற்றவர்த்தக உடன்பாடு செய்து கொள்வதற்கான வாய்ப்புகளை இந்தியா ஆராயும் என மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியனி லிருந்து பிரிட்டன் விலகியுள்ளதால் அந்நாட்டுடன் வரியற்றவர்த்தக உடன்பாடு செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை இந்தியா ஆராயும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், திருமதி நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார்.

புது தில்லி வந்துள்ள பிரிட்டன் வர்த்தகமைச்சர் திரு சஜ்ஜீத் ஜாவீத்ஐ சந்தித்துப்பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரிட்டனுடன் விரைவில் விரிவாகப் பேசப்படும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே இந்தியா ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் தாராளவர்த்தக உடன்படிக்கை தொடர்பாக பேச்சு நடத்தியு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் வர்த்தகமைச்சர், திரு ஜாவீத் மத்திய அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று கூறினார். இந்தியா – பிரிட்டன் இடையே ஏற்கனவே வலுவான வர்த்தகஉறவுகள் இருப்பதாகவும் அதனை மேலும் வலுப்படுத்த பிரிட்டன் விரும்புவ தாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply