பிரியங்கா காந்தியை அரசியலில் இறக்கி உள்ளதன்மூலம் ராகுல் காந்திக்கு திறமை போத வில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது என்று பாஜக செய்திதொடர்பாளர் சம்பித்பாத்ரா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில கிழக்குபகுதி காங்கிரஸ் பொதுசெயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக செய்திதொடர்பாளர் சம்பித் பாத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் மூலம் ராகுல்காந்திக்கு திறமை ‌போதவில்லை என்பதை விளக்குகிறது.

மேலும் மகாகத்பந்தன் அமைத்துள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை. காங்கிரஸ் கட்சியை ஒரே குடும்பம் சொந்தம்கொண்டாடி வருகிறது. ஆனால் பாஜகவுக்கு கட்சிதான் குடும்பம். ஆனால் காங்கிரசுக்கு குடும்பம்தான் கட்சி. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply