காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி அளிக்கப் பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ் ராஜ் கங்காராம் ஆஹிர் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின்கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் எழுத்துமூலம் அளித்த பதில்:

பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தீவிரவாத செயல்களுக்கு ஊக்கமளித்துவரும் தீவிரவாத இயக்கத் தலைவர்கள் சிலருடன் காஷ்மீரிலுள்ள பிரிவினைவாத இயக்கதலைவர்கள் தொடர்பில் உள்ளனர்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவியும் வருகிறது. அங்கிருந்து சிலஉத்தரவுகளும் வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்க இதுபோன்ற நிதியுதவி அங்கிருந்து பெறப்பட்டு வருவதாகத்தெரிகிறது.

இதுபோன்ற பிரிவினைவாத தலைவர்கள் யார் என்பதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. அண்மையில் பிரிவினைவா தலைவர்கள் சிலரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கைதுசெய்துள்ளனர். அவர்களுக்கு எங்கிருந்து நிதியுதவி வருகிறது என்பது தொடர்பான தகவல்களும் பெறப்பட்டுள்ளன.

மேலும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள்மீது தக்க நடவடிக்கைகளை பாதுகாப்புப் படைகள் மேற்கொள்கின்றன. மேலும் தீவிரவாத செயல்களுக்காக நிதியுதவி கிடைப்பதை தடுக்கவும் விசாரிக்கவும் தேசியபுலனாய்வு அமைப்பு தனி மையத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Leave a Reply