கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து கருப்பர்கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்று வெளியிடபட்டது. அந்தவீடியோ பதிவுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் வேல்யாத்திரை செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக பாஜகசார்பில் திருத்தணியில் கடந்தமாதம் 6-ம் தேதி தொடங்கிய வேல்யாத்திரை, திருச்செந்தூரில் இன்று நிறைவடைந்தது. இதன் நிறைவு விழா, திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.

அப்போது பேசியவர், ‘கடவுள் முருகனை அவமதித்ததவர்களை எதிர்த்து வேல்யாத்திரை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். பீகாரைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிஅமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல, தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிஅமையும் என்றும், சூரிய ஒளி மூலம் தாமரைமலரும் என்றும் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.