பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. பீகாரில் லோக்சபா தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்கள் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யபட்டுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே பாஜக தயாராகிவருகிறது. இதில் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மிக முக்கியமான மாநிலங்களாக பார்க்கப்படுகிறது. இவை இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 120 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன

பாஜக பீகாரில் மிகவும் வலுவான கட்சியாகும். பீகாரில் மொத்தம் 40 லோக்சபா இடங்கள் உள்ளது. சென்றமுறை 2014ல் நடந்த தேர்தலில் பாஜக அங்கு 40க்கு 31 இடங்களை வென்று சாதனை படைத்தது. உத்தர பிரதேசம் போலவே பாஜக இங்கு அதிக தொகுதிகளை வெல்வதில் குறியாக உள்ளது.

பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி பார்ட்டி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையில் கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டது. அதன்படி பீகாரில் உள்ள 40 லோக்சபா இடங்களில் 17 இடங்களில் பாஜக போட்டியிட உள்ளது. 17 இடங்களில் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட உள்ளது. 6 இடங்களில் லோக் ஜனதாசக்தி போட்டியிட இருக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டார். காங்கிரஸ் கூட்டணி பாஜக.,வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று இருந்த ராஷ்டிரிய லோக்சமதா பார்ட்டி (ஆர்எல்எஸ்பி ) அந்த கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகி விட்டது .

Leave a Reply

Your email address will not be published.