பீட்டா அமைப்பை அரசு கண் காணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து பா.ஜ.,மாநில தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ., குழுவினர் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தாவேவை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பீட்டா அமைப்பை அரசுகண்காணிக்க வேண்டும். அவர்கள் தேவையில்லாமல் நமதுபாரம்பரிய முறையில் தலையிடுகிறார்கள். பிரச்னையை தீர்க்க மத்திய சுற்றுச் சுழல் அமைச்சரை சந்தித்தோம் . உள்துறை அமைச்சரையும் சந்திப்போம் எனக்கூறினார்.

Leave a Reply