பிரதமர் மோடி அறிமுகப் படுத்திய ‛பீம் ஆப்' 6 நாட்களில் 50 லட்சம் பதிவிறக்கத்தை தாண்டி சாதனைபடைத்துள்ளது.

மக்களிடையே மின்னணு பரிவர்த் தனையை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 30 ம் தேதி மத்திய அரசு நிறுவனமான என்.பி.சி.ஐ., வடிவமைத்துள்ள ‛பீம் ஆப்' பை பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்தினார்.

அறிமுகப்படுத்தப் பட்ட 6 நாட்களுக் குள்ளாகவே 50 லட்சம் பதிவிறக்கத்தை தாண்டியது. இந்தியாவில், பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப் படும் ஆப் பட்டியலில் பீம் ஆப் முதலிடம் பெற்றுள்ளது.

இது குறித்து,தெற்குகிழக்கு ஆசிய மற்றும் இந்தியாவிற்கான கூகுள்நிறுவன துணை தலைவர் ராஜன் ஆனந்தன் கூறுகையில், " இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அபாரவளர்ச்சி அடைந்து வருகிறது. மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ள பீம் ஆப் 50 லட்சம் பதிவிறக்கத்தை தாண்டியுள்ளது" என்றார்.

"ஐ.ஓ.எஸ்.,க்கான ஆப் இன்னும் 10 நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப் படும்.மேலும், தற்போதுள்ள, இந்தி, ஆங்கிலம் மொழிகள் தவிர்த்து பிறமாநில மொழிகள் விரைவில் சேர்க்கப்படும்" என நிதி ஆயோக் தலைமை செயல்இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply