சென்னை: டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் 'பீம்' செயலியை (Beem app) பிரதமர் மோடி அறிவித்தார். இந்த செயலி மூலம் எப்படி பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்த விளக்கங்களை பார்ப்போம்.

*சட்டமேதை அம்பேத்கர் நினைவாக 'பீம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த செயலி இணையதளம் இல்லாமலேய பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

*ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிளின் IOS இயங்குதளங்களில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

 

*நீங்கள் ஆண்டிராய்ட் மொபைல் பயன்படுத்துவராக இருந்தால் Google Play Store-ல், 'பீம்' செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

*பின்னர், அதில் உங்கள் வங்கி கணக்கு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

*அதற்கான ரகசிய குறியீட்டை எண்ணையும் பதிவு செய்துவிட்டால் போதும். அவ்வளவுதான், அந்த நொடியில் இருந்து உங்கள் மொபைல்தான் உங்கள் வங்கியை போல் செயல்படும்.

*எப்படியென்றால், கடையில் ஒரு பொருளை வாங்கி கொண்டு, இதேபோன்று பீம் செயலி வைத்திருக்கும் வர்த்தகரின் மொபைல் எண்ணை பெற்றுகொண்டு நம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடலாம்.

*இது தவிர ஆதார் எண்ணை வங்கி கணக்கோடு இணைத்து விட்டால் இன்னும் எளிதாகிவிடும்.

*வர்த்தகர்கள் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவியை வாங்கி வைத்திருந்தால் உங்கள் ரேகையை பதிவு செய்து பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

*நீங்கள் வெளியே செல்லும் போது கார்டுகளோ, மொபைல் இணைய சேவையோ தேவை இல்லை. உங்கள் விரல் ரேகையே போதுமானது.

*இந்த பீம் செயலியில் முக்கிய அம்சம் என்னவென்றால் பேடிஎம் (PAYTM) போன்ற ஈ-வாலட்களை போல் முன்கூட்டியே பணத்தை வைப்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

*இணைய பரிவர்த்தனை போல் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை செலவு செய்யலாம்.

*இந்த முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ள வரம்பு உள்ளது. அதன்படி, ஒரு பரிவர்த்தனைக்கு, அதிகபட்சமாக ரூ.10,000.

*ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.20,000 வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

*ஆண்டிராய்ட் இல்லாத சாதாரண செல்போன்களில் இருந்து *99# எண்ணை அழைத்தால் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் கிடைக்கும்.

*தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த ஆப் வெளியாகியுள்ளது.விரைவில் பல்வேறு மொழிகளில் 'பீம்' செயலி வெளியாக உள்ளது.

Leave a Reply