புதியதோர் தமிழகம் அமைக்க பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.


சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார் தமிழிசை செளந்தரராஜன்.
அப்போது  அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி புதியதோர் இந்தியாவை உருவாக்கத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இதே போல் புதிய தோர் தமிழகத்தை உருவாக்க தமிழக பாஜக முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கெனவே வெற்றிபெற்ற திராவிடக் கட்சிகளால் வளர்ச்சி ஏதும் எட்டப்பட வில்லை. இது வரை அடிப்படை வசதிகள் கூட முழுமையாகச் செய்து தரப்பட வில்லை.


தண்டையார்பேட்டையில் பயணிகள் ரயில் முனையம் அமைக்கவேண்டும் எனில் அது பாஜக தலைமையிலான மத்திய அரசால் மட்டுமே முடியும். பாஜக வெற்றிபெற்றால் முதல்தர சட்டப்பேரவை தொகுதியாக
ஆர்.கே.நகர் மாற்றம் பெறும். நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தமிழிசை.

Leave a Reply