புதிய இந்தியாவை உருவாக் குவதில் வேகமாகமுன்னேறி வருகிறோம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள ஜனதாமைதானத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கியது.

பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில்,  பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் அதை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அதன் அடிப்படையில் தேர்தல் வியூகம்வகுப்பது பற்றி விவாதிக்கப் பட்டது.

இந்நிலையில், இன்று 2-வது நாளாக நடைபெற்ற கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், புதியஇந்தியாவை உருவாக்குவதில் வேகமாக முன்னேறிவருகிறோம். முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் பெரும்அளவில் பாதிக்கப்படுவதாகவும் இதனை பொறுத்து கொள்ள முடியாது என்று கவலையுடன் பேசினார் மோடி.

மேலும் புதியஇந்தியா உருவாக்கிட அனைவரும் பாடுபடவேண்டும். பாஜகவின் வெற்றிகளிப்பில் நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. சர்ச்சை தரும் பேச்சை குறைத்து கடுமையாக உழைக்கும் மந்திரத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.


முத்தலாக் முறையிலான பாதிப்புகள் குறித்து நாம் மாவட்ட வாரியாக எடுத்துச் சென்று விளக்கி முடிவுக்குகொண்டு வர வேண்டும் என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply