புதுச்சேரியில் இன்னும் புதிய அரசு பதவியேற்காத நிலையில், அங்கு புதியதுணைநிலை ஆளுனராக பதவியேற்றுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி பலபுதிய அறிவிப்புக்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி துணை நிலை ஆளுனராக பதவியேற்றுக் கொண்ட கிரண்பேடி, 1031 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளார். ஜூன் 8 ம் தேதி முதல் செயல் பாட்டிற்கு வரும் இந்த அழைப்பு எண்ணை தொடர்புகொண்டு மக்கள், லஞ்சம், ஈவ் டீசிங், சமூக விரோத செயல்பாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை அளிக்கலாம். புதுச் சேரியை அமைதியான யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்காக குற்றங்களை தடுக்கவும், சாலைபாதுகாப்பை மேற்படுத்தவும் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இலவச அழைப்புசேவை எண் மூலம் அளிக்கப்படும் புகார்கள் மிக ரகசியமாக வைக்கப்படும் எனவும் கிரண்பேடி உறுதி அளித்துள்ளார். புகாரளித்தவர் பற்றிய விபரம் போலீஸ் ஐஜி மற்றும் தலைமை செயலருக்கு மட்டுமே தெரியும்வகையில் இந்த புகார்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொய்புகார்கள் அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குற்றம்தொடர்பாக புகார் அளிப்பவருக்கு உரிய நீதிபெற்று தரும் போலீசாருக்கு பரிசு வழங்கப்படும்.

கல்வித் துறை செயலர் மற்றும் பள்ளிகல்வி இயக்குனர் ஆகியோர் பள்ளிகளுக்கு அதிரடி விசிட்செய்து ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இதேபோன்று மருத்துவமனைகைளுக்கு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கவேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

விளம்பர பலகைகள், ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவேண்டும். விஐபி.,க்கள் வருகைக்காக போக்குவரத்தை நிறுத்தகூடாது எனவும், இந்த உத்தரவுகள் ஒருவாரத்திற்குள் அமலுக்கு வரவேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

விஐபி கலாச்சாரத்தை மாற்றவேண்டும் என்பதை தனது பதவியேற்பு விழாவிலேயே கிரண்பேடி மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழாவில் தனதுகாலில் விழுந்த ஒருபெண் எம்.எல்.ஏ.,வின் காலில் பதிலுக்கு விழுந்துவணங்கிய கிரண் பேடி, காலி்லவிழுந்து வணங்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

Leave a Reply