புத்தப் பூர்ணிமா விழா பௌத்த நாடுகளில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் முழு பெளர்ணமியையொட்டிய ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெளத்தநாடுகளில் ஒன்றான இலங்கையில், முதல் முறையாக இந்த விழாவை மே மாதம் 12-ம் தேதி கொண்டாடுகிறது. 
 
இவ்விழாவில் பங்கேற்குமாறு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. புத்தபூர்ணிமா விழாவில் இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மியன்மர், திபெத், பூடான், மங்கோலியா மற்றும் பௌத்தமதத்தை பின்பற்றும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
 
புத்தப் பூர்ணிமா விழாவில் பங்கேற்பதற்காக  வரும் மே மாதம் பிரதமர் மோடிதம் இலங்கை செல்கிறார். விழாவில் பங்பேற்பதை பிரதமர் மோடி உறுதிசெய்துள்ளதாக இலங்கை அமைச்சர் விஜய தாசா ராஜபக்சே கூறியுள்ளார்.
 
 இந்தவிழாவை ஐக்கிய நாடுகள்சபை அங்கீகரிக்க உள்ளது குறிப்பிடதத்க்கது.

Leave a Reply