புத்தரின் கொள்கைகள் எக்காலத் துக்கும் பொருத்த மானவை என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இலங்கையில் இரண்டுநாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டு தலைநகர் கொழும்புக்கு நேற்று வியாழக்கிழமை சென்றடைந்தார்.

புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மறைவு ஆகிய மூன்று நிகழ்வுகளை குறிக்கும் விசாகதினக் கொண்டாட்டத்தை மிகப்பெரிய அளவில் இலங்கை அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு கொழும்பில் இன்று வெள்ளிக் கிழமை (மே 12) நடைபெறும் நிகழ்வில் உலகத்தலைவர்கள், புத்தமதத் தலைவர்கள், 400-க்கும் மேற்பட்ட குழுவினர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நரேந்திரமோடி, இலங்கைக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார்.

இதையொட்டி, இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்றடைந்த அவரை விமானநிலையத்தில் அந்நாட்டுப்பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து, கொழும்பில் சீம மலாக்காபகுதியில் உள்ள புராதன சிறப்பு மிக்க கங்கராயம்மா புத்தர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர், விசாகக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அங்குநடைபெற்ற பிரசித்தி பெற்ற விளக்குகள் ஏற்றும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.

இதையடுத்து இந்தியாவின் உதவியுடன் அங்கு கட்டப் பட்டிருக்கும் டிக்கோயா மருத்துவமனையை இன்று திறந்துவைத்து, இந்திய வம்சாவளி தமிழர்களுடன் பேசினார்.

அவர் பேசுகையில், புத்தர் காட்டிய கொள்கைகள் நம் அனைவருக்கும் எக்காலத்துக்கும் பொருத்த மானவை. இந்திய மக்களின் சார்பில் புத்தபூர்ணிமா நாளில் இலங்கை மக்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்த மோடி, இந்தியா-இலங்கை இடையே உறவை வலுப்படுத்தும் திருநாளாக புத்தபூர்ணிமா திகழ்கிறது. புத்த மதத்தில் இருந்து இந்தியா நிர்வாகம், கலாசார கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய பேரரசர் அசோகரின் மகனும், மகளும் இலங்கைக்கு சென்று புத்த மதத்தை பரப்பினர் என்று கூறினார்

புத்தமதத்தின் முக்கிய அடையாளமாக இலங்கை திகழ்ந்து வருகிறது. புத்தரின் ஞானத்தை இந்தியாவுக்கு பரப்பும் நிலையில் இலங்கை தற்போதுள்ளது.  

இந்தியாவின் கொள்கைவேரை இலங்கை கொண்டுள்ளது. நமது பிராந்தியம் மதிப்பிட முடியாத புத்தரையும், அவரது போதனைகளையும் உலகத்துக்கு பரிசாக வழங்கியுள்ளது. வெறுப்பும், வன்முறையும் உலகஅமைதிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

''இன்றைய உலக அமைதிக்கு மோதலில் ஈடுபட்டு இருக்கும் இரண்டுநாடுகள்தான் ஈடுபடவேண்டும் என்பது இல்லை. இதற்கு நல்லமனது வேண்டும். மன நீரோட்டம் வேண்டும், நல்ல சிந்தனைகள் வேண்டும். வெறுப்பு, வன்முறையில் இருந்து வெளியேவந்து சிந்திக்க வேண்டும். அதன் அடிவேரில் இருந்து சிந்திக்கக் கூடாது.

அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல், சிலர் வெறுக்கத் தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு மரணங்களையும், அழிவுகளையும் உலகில் ஏற்படுத்தி வருகின்றனர். புத்தரின் அமைதிக்கானசெய்தி இந்த நேரத்தில் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. உலகில் அதிகரித்துவரும் வன்முறைக்கு சிறந்த தீர்வாக புத்தரின் செய்தி அமையும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

வரும் ஆக்ஸ்ட் மாதத்தில் வாரணாசியில் இருந்து கொழும்புக்கு ஏர் இந்தியா நேரடி விமா சேவை தொடங்கப்படும். தமிழ்சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இந்த விமான சேவையைப் பயன் படுத்தி காசிக்கு வந்து செல்ல ஏர் இந்தியா விமான சேவை உதவும் என தெரிவித்தார்.

வர்த்தகத் துறையில் இந்தியாவும் இலங்கையும் ஒருங்கிணைந்து செயல் படுகின்றன. இந்தியாவும் இலங்கையும் ஒருவருக்கு ஒருவர் பல்வேறு துறைகளில் சார்ந்து இருக்கிறது. இலங்கையின் கல்வி, பொருளாதார திட்டங்களுக்கு இந்தியா உதவுகிறது என்றவர் தேயிலைக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் தொடர்புண்டு என்றார்.

மேலும், எம்ஜிஆர் இலங்கை மண்ணில் பிறந்தவர். இலங்கை அரசுடன் இணைந்து தமிழர்களின் வளர்ச்சிக்கு இந்தியா உதவுகிறது.கல்வி, சுகாதார திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து நிதியுதவி செய்யும். உரிமை, மேம்பாட்டுக்காக போராடிய தொண்டமான் போன்றவர்களை மறக்க முடியாது என்றவர் .
இலங்கையின் அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை அனைத்து மாகாணங்களுக்கும் விரிவுப் படுத்தப்படும். அதற்கு இந்தியா உதவும் என்றார்.

இலங்கை அரசின் 5 ஆண்டு தேசிய திட்டத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கும். மலையகதமிழர்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகள் இந்தியா சார்பில் கட்டித் தரப்படும் என்று கூறிய மோடி திறக்குறளை மேற்கொள்காட்டியே பேசினார்.

Leave a Reply