ஜம்முவில் மன்சார் ஏரி வளர்ச்சிதிட்டத்தை தொடங்கி வைக்கப் பட்டுள்ளதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை 20 லட்சமாக உயரும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜம்முவில் உள்ள மன்சார் ஏரி வளர்ச்சி திட்டத்தை, மத்திய வடகிழக்கு பிராந்தியங் களுக்கான இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜிதேந்திரசிங் பேசியதாவது;

மன்சார் பகுதி மக்களுக்கு இன்றைய நாள் ஒருவரலாற்று சிறப்புமிக்க நாள். 70 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் மன்சார் ஏரி வளர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 6 ஆண்டுகளில் பலதேசிய திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 70 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைவிட அதிகம்.

மன்சார் ஏரி மற்றும் தேவிகா ஆறு வளர்ச்சிதிட்டங்கள் ரூ.200 கோடி செலவில் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தியபின், மன்சார் பகுதிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 லட்சமாக அதிகரிக்கும். மன்சார் ஏரி புதுப்பிப்பு திட்டத்தால், 1.15 கோடி மனிதநாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஆண்டுக்கு ரூ.800 கோடிக்கும் அதிகமான வருவாய்கிடைக்கும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Comments are closed.