புல்லட் ட்ரெயின் ப்ராஜக்ட்டுக்காக ஜப்பான் கொடுத்தபணம் மஹாராஷ்டிரா அரசாங்கத்திடம் பல ஆயிரம்கோடிகள் இருந்தன.

எப்போது சிவசேனா ஒதுங்கத் தொடங்கியதோ அப்போது மோடியும், அமித்ஷாவும் இனி மஹாரஷ்டிராவில் பா.ஜ.க அரசு அமைக்கமுடியாது என்று தீர்மானித்து விட்டார்கள். ஆனால் அவர்கள் கவலை இந்த பணத்தை விவசாயக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் காங்கிரஸும் NCP யும் கைவைத்துவிட தீர்மானிப்பார்கள் ( விவசாயக் கடன் தள்ளுபடி என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது).

இதற்க்குமுன்பு விவசாய கடன் தள்ளுபடி என்று காங்கிரஸ் கொள்ளையைத்தது எல்லோருக்கும் தெரியும். NCP கேட்கவே வேண்டாம்.

சரத்பவாரின் மகளே ஆண்டுக்கு 40 கோடி விவசாய வருமானம் என்ற பெயரில் வரியே கட்டாமல் ஏமாற்றும் பேர்வழி.

முன்பு ஏற்கனவே நடந்ததுபோல கடன் தள்ளுபடியில் பணத்தின் பெரும்பகுதியை காலி செய்துவிடுவார்கள்.அதைத்தடுக்க…அந்தபணத்தை மீண்டும் மத்திய அரசாங்கக் கணக்குக் கொண்டுவர என்ன செய்யலாம் என்று யோசித்துபோட்ட நாடகம்தான் இந்த இரண்டு நாள் முதல்வர்.

ஃபட்நாவிஸ் அந்தப்பணத்தை முழுவதையும் மத்திய அரசின் கணக்குக்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல்,தன்பங்குக்கு 5600 கோடி ரூபாய் விவசாயகடன் தள்ளுபடின்னு அறிவித்து கையொப்பமிட்டுவிட்டு ராஜினாமா செய்து விட்டார்.

இப்போ.. சேனா கூட்டணி விவசாயக்கடன்களை தள்ளுபடியும் செய்யணும். அதே சமயத்தில் புல்லட் ட்ரெயின் பணத்தை தொடவும் முடியாது.

ஊழலை தடுக்க. தனது பெயர்கெட்டாலும் பரவாயில்லை…
என்று நாட்டின் நலனிற்காக ஆட்சியில் ஏறி காரியம் சாதித்த மோடிஜி அமித்ஷாஜி கூட்டணி என்றும் முனை மழுங்காத ராஜதந்திர போர்வாள்தான்.!

நினைத்து நிதானித்து செயல்பட்ட மோடி அரசுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

Comments are closed.