புல்வாமா தாக்குதலை ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாத அமைப்புதான் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்புஇல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்திய துணை ராணுவப் படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளிடையே இந்தத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தத்தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய விரிசல் மேலும் அதிகமாகி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்கா, நியூசிலாந்து போன்றநாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் முன்னள் அதிபர் முஷாரப் தனியார் செய்திநிறுவனம் ஒன்றுக்கு பதிலளித்திருக்கிறார். அதில் முஷாரப் பேசும் போது,” புல்வாமா தாக்குதல் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்றமில்லை.

புல்வாமா தாக்குதலை ஜெய்சி முகமத் அமைப்பினர்தான் செய்துள்ளனர். ஜெய்ஷ் இ முகமத் அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது எந்தபரிவும் எனக்கு இல்லை. இம்ரான்கானுக்கு ஜெய்ஷ் இ முகமத் அமைப்பின் எந்தபரிவும் இல்லை என்று நினைக்கிறேன்.

என்னை பொறுத்தவர்ரை இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை அவர் என்னையும் கொலைசெய்ய திட்டமிட்டார். ” என்று தெரிவித்தார்.

Leave a Reply