பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இதோ பூனைகுட்டி வெளியே வருகின்றது, இந்த செய்தியில் தலைமை விஞ்ஞானி சொல்லியிருக்கும் விஷயங்களை கவனியுங்கள்

இந்திய ராணுவத்திற்காக‌  436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது இது 753 கி.மீ உயரத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

இதுதவிர லித்துவேனியா நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான 24 செயற்கைக்கோள்கள் உட்பட 28 செயற்கைக்கோள்களும் சுமார் 505 கி.மீ உயரத்தில் விண்வெளியில் நிலை நிறுத்தப்படுகிறது.

29 செயற்கைக் கோள்களும் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த உடன், ராக்கெட்டின் 4-வது நிலை வேறுபட்ட உயரத்திற்கு இயக்கப்படுகிறது.

கவனித்தீர்களா

இந்த எமிசாட்தான் இப்பொழுது துருப்பு சீட்டு 753 கிமீ உயரத்தில் அதை நிறுத்த போகின்றார்கள், பல்வேறு வகையான உளவு தகவல்களை அது அனுப்பும்

இதனை நிச்சயம் உடைக்க எதிரி நாடுகள் விரும்பும், அப்படி ஒரு கோள் இயங்க அவை விடாது

இதனால்தான் எங்களிடமும் சாட்டிலைட்டை நொறுக்கும் ஏவுகனை உண்டு என நிரூபித்து காட்டிவிட்டு எமிசாட்டினை 1ம் தேதி அனுப்புகின்றது இந்தியா

எமிசாட் உள்நாட்டு தயாரிப்பு என்றாலும் அதன் நவீனபாகங்கள் நம் தயாரிப்பு அல்ல‌..

பல வெளிநாடுகளிலிருந்து பெற்றநுட்பம் மூலம் அட்டகாசமான நவீன கோளை செய்துவிட்டோம் இவை எப்படி கிடைத்தன?

சொன்னால் திட்டுவீர்கள் ஆனால் அதுதான் உண்மை. #மோடியின் திருத்தபட்ட வெளியுறவு கொள்கையால் சில சக்திகளிடமிருந்து பெறபட்ட விஷயம் இது

சுதந்திர காலத்திற்கு பிறகு இப்போது நாட்டுக்கு எது தேவையோ அதை பெற்றுவிட்டோம்

ஏப்ரல் 1ல் எமிசாட் விண்ணில் நிலை நிறுத்தபட்டபின் அதற்கான பாதுகாப்பினை நேற்று சோதிக்கபட்ட ஏவுகனை ஏசாட் வழங்கும்

தேசம் பெரும் மைல் கல்லினை எட்டியிருக்கின்றது

ஜெய்ஹிந்த்

ஸ்டான்லி ராஜன்..

Leave a Reply