பூமித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளான பூமிதினத்தில், நமது பூமி சுத்தமாகவும், பசுமை யாகவும் இருப்பதற்கான உறுதியை அனைவரும் ஏற்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச பூமிதினம் கொண்டாடப் படுகிறது. இதனையொட்டி டிவிட்டர் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, தாவரங்களுடனும், விலங்குகளுடனும், பறவைகளுடனும் நாம் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்றும், இந்த உயிரினங்களுடன் இணைந்து நாம் பூமையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நமது எதிர் கால சந்ததியர்க்காக இத்தயை உறுதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாப்போம், புவிவெப்பயமாதலைத் தடுப்போம் என்பதே இந்த ஆண்டுக்கான பூமி தின லட்சிணையாக அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள பிரதமர் மோடி, இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை இதுநிச்சயம் ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply