டெல்லியில் நிதி ஆயோக்சார்பில் மெத்தனால் பொருளாதாரம் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டார். அப்போது, பெட்ரோலியத்தை இறக்குமதி செய்யாத நாடாக இந்தியா விரைவில்மாறும் என்று அவர் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சரிந்துவந்தாலும் அவற்றை இறக்குமதி செய்வதற்கு ரூ.4.7 லட்சம் கோடிவரை இந்தியா தற்போது செலவழித்து வருகின்றது.

பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி (இயற்கை எரிவாயு), நிலக்கரி போன்ற எரி பொருட்கள் பயன் படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகின்றது. இதன்மூலம் கிராமப்புறங்கள் மற்றும் விவசாயத் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் சரிவுகளை சந்தித்துவரும் சமூக பொருளாதார சூழ்நிலை மற்றும் விவசாய தொழில்களை மேம்படுத்தலாம். கிராம மக்கள் மற்றும் விவசாயத்தை பாதுகாப்பதற்கு மாற்று வழியை நாடுவதற்கான நேரம் இதுவாகும்.

பெட்ரோலியத்திற்கு மாற்றாக இயற்கை எரி பொருட்களை ஊக்குவித்தால், பெட்ரோலித்தை இறக்குமதிசெய்யாத நாடாக இந்தியா விரைவில் மாறும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply