பெட்ரோலில் கலக்கப் படும் எத்தனால் அளவை 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து, பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திரபிரதான் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் செய்தியாளர்களிடம் பேசியவர், இதனால் கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் பயனடையும். கடந்தக்கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கரும்புச்சக்கையிலிருந்து கிடைக்கும் எத்தனாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 16 ரூ முதல் 17 ரூ வரை வழங்கிவந்ததாகவும், தற்போது தேசிய ஜனநாயக்க் கூட்டணி அரசு 49 ரூபாய் 50 காசு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.