பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள் கொண்டுவந்தால், அதனை மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுவரும் மின்வெட்டு குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகளவில் வளர்ந்துவரும் நாடுகளில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக திகழ்ந்து வருகிறது.    

பெட்ரோல், டீசல்விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் என்பது தவறான தகவலாகும். மேலும், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் மத்திய அரசு கொண்டுவந்தால் அதனை தமிழகம் உள்ளிட்ட  பிற மாநில அரசுகள் ஏற்க வேண்டும்  என்றார்.
 

Leave a Reply