மகளிர் தினம், இன்று உலகம்முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மகளிர் தின வாழ்த்தை பதிவு செய்து, வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

பெண்களின் ஆற்றல், சாதனைகளை நினைத்து நாம் கட்டாயம் பெருமை கொள்ள வேண்டும். பெண்களின் வளர்ச்சி தான், நாட்டின் வளர்ச்சி. பெண்கள், அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். அவர்களின் முன் மாதிரியான செயல்கள், மனிதகுல வரலாற்றில் ஓர் அழிக்கமுடியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டு மல்லாமல், உங்களை ஊக்குவித்த சில பெண்களைப்பற்றி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தொடர்ந்து அந்த பதிவில், இந்த ஆண்டு தொடக்கத்தில் மரணமடைந்த, சத்தீஸ்கர் மாநிலத்தைச்சேர்ந்த குன்வார் பாய் (106 ), தனது ஆடுகளை விற்று, கழிப்பறை கட்டினார். ஸ்வச்பாரத் திட்டத்துக்கு, அவரது பங்களிப்பு மறக்கமுடியாதது. அவரது செய்கை என்னை வெகுவாக ஈர்த்தது. 'தூய்மை இந்தியா' என்ற மகாத்மாவின் கனவை நனவாக்க முயற்சிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் குன்வர் பாய் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பெண்களிடம் உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியது:-

ஆண்களுக்கு இணையாக பெண்களும் உரிமைகளை பெற்ற சமூகத்தின் வளர்ச்சிவேகமாக இருக்கும் என்று தெரிவித்தார். வீட்டில் கழிவறை கட்டுவதற்காக ஆடுகளை விற்ற சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி குன்வர் பாயை நினைவுகொள்வதாகவும், தூய்மை இந்தியா திட்டத்திற்காக அவரது தியாகம் மறக்க முடியாத ஒன்று என்றும் தெரிவித்தார். 

நாட்டில் உள்ள மாமியார்கள் எல்லாம் பெண் குழந்தைகள் தான் வேண்டும் என்று கூறிவிட்டால் அது சமூகத்தில் ஒருமிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெண் குழந்தைகளை பாரமாக கருதாதீர்கள் நாட்டுக்கு அவர்கள் பெருமையை தேடித்தருவதை சுற்றிப்பாருங்கள். எல்லா துறையிலும் அவர்கள் கோலோச்சி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்

 

மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அரசு ஆணையின் படி அவரது  உரை ராஜஸ்தானில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்பட்டது. 6 வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இதில்கலந்து கொள்ளவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. 

பின்னர் அங்கிருந்த சிறு குழந்தைகளுடன் பிரதமர் மோடி விளையாடினார். 

Leave a Reply