பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளில் தேசியஜனநாய கூட்டணி அரசு  மிகவும் கவனமாக உள்ளது , பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் உறுதியாக இருப்ப தாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
 
சரவதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது.  பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை களைய  சட்டப் பூர்வ மற்றும் நிறுவமனயப் படுத்தப்பட்ட உட்கட்டமைப்பை வலுப்படுத்த உள்ளது.
 
ஒருதேசமாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் நமது சமூகத்தில் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பெண்களுக்கு அவசரகாலத்தில் உதவுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் தேசியளவிலான அவசரபதில் அமைப்பு அமைப்பதற்காக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான அவசரஅழைப்பு எண் 112 ஆக இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply