சென்னை விமான நிலையத்தில் இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டணிவைத்தாலும் கூட்டணி மூழ்கிப் போகும். இனி வரும் எந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்தாது”  “எங்களைக் காட்டிலும் நாடாளுமன்ற பணிகளை திமுக தாமதமாக தொடங்கி யுள்ளது.  தமிழக பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறுமாதம் முன்பாகவே பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களை நியமித்துவிட்டது” .

 

நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டும் என தமிழகமக்கள் விரும்புகிறார்கள், எனவே மீண்டும் அவர் தான் வேட்பாளரா என்பதை கட்சி முடிவுசெய்யும் .  ‘Metoo’ பெண்களுக்கு புதியநம்பிக்கையை கொடுத்துள்ளது. சினிமா துறையில் கமிட்டி அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. எந்த ஒரு சிறு புகார் வந்தாலும் அதை விசாரிக்கவேண்டும் அது தான் நல்ல தீர்வாக இருக்கும் .


“பெண்கள் கரும்பு என்பதால் சுவைத்துபார்க்க நினைக்ககூடாது; பெண்கள் கரும்புத் தன்மையோடு இருக்கிறார்களா ? இல்லை இரும்புத்தன்மையோடு இருக்கிறார்கள் என்று நிரூபிக்கும் காலம் வந்து விட்டது. என  தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன்  கூறினார்.

 

Leave a Reply